கலைக்கழகம்-பஜனைப்பாடல்கள்

Freitag, 23. August 2013

பகவதி தேவி

பகவதி தேவி பர்வத தேவி 
 பலமிகு தேவி துர்கையளே 
ஜெகமது யாவும் ஜெய ஜெய வெனவே 
 சங்கரி யுன்னைப் பாடி டுமே 
 ஹந ஹந தகதக பசபச வெனவே 
 தளிர்த்திடு ஜோதியானவளே 
 ரோகநி வாரணி சோக நிவாரணி 
தாபநிவாரணி ஜெய துர்க்கா! 
தண்டினி தேவி தக்ஷினி தேவி 
 கட்கினி தேவி துர்க்கையளே
 தந்தன தான தனதன தான  
தாண்டவ நடன ஈஸ்வரியே
 முன்டினிதேவி முனையோளி சூலி 
 முனிவர்கள் தேவி மணித் தீவி 
 ரோகநி வாரணி சோக நிவாரணி 
தாபநிவாரணி ஜெய துர்க்கா! 
காளினி நீயே காமினி நீயே 
 கார்த்திகை நீயே துர்க்கையளே 
நீலினி நீயே நீதினி நீயே 
 நீர்நிதி நீயே நீர் ஒளியே 
 மாலினி நீயே மாதினி நீயே 
மாதவி நீயே மான் விழியே 
 ரோகநி வாரணி சோக நிவாரணி 
தாபநிவாரணி ஜெய துர்க்கா! 
 நாரணி மாயே நான்முகன் தாயே 
 நாகினி யாயே துர்க்கையளே 
ஊரணி மாயே ஊற்று தாயே 
ஊர்த்துவ யாயே ஊர் ஒளியே 
காரணி மாயே காருணி தாயே 
கானக யாயே காசி னியே 
ரோக நிவாரணி சோக நிவாரணி 
தாப நிவாரணி ஜெய துர்க்கா! 
 திருமக ளானாய் கலைமக ளானாய் 
மலைமகளானாய் துர்கையளே 
பெருநிதி யானாய் பேரறிவானாய் 
 பெருவலி வானாய் பெண் மையளே 
நறுமல ரானாய் நல்லவ ளானாய் 
 நந்தினி யானாய் நங்கையளே 
 ரோகநி வாரணி சோக நிவாரணி
 தாபநிவாரணி ஜெய துர்க்கா! 
வேதமும் நீயே வேதியள் நீயே 
 வேகமும் நீயே துர்க்கையளே 
நாதமும் நீயே நாற்றிசை நீயே  
நாணமும் நீயே நாயகியே  
மாதமும் நீயே மாதவம் நீயே  
மானமும் நீயே மாயவளே 
ரோகநி வாரணி சோக நிவாரணி 
தாபநிவாரணி ஜெய துர்க்கா! 
 கோவுரை ஜோதி கோமள ஜோதி 
 கோமதி ஜோதி துர்க்கையளே 
நாவுறை ஜோதி நாற்றிசை ஜோதி 
 நாட்டிய ஜோதி நாச்சியளே 
பூவுறை ஜோதி பூரண ஜோதி 
 பூதநற் ஜோதி பூர ணையே 
ரோகநி வாரணி சோக நிவாரணி 
தாபநிவாரணி ஜெய துர்க்கா! 
 ஜெய ஜெய சைல புத்ரி ப்ரஹ்ம 
சாரணி சந்த்ர கண்டி னியே 
 ஜெயஜெய கட்ஷ மான்டினி 
ஸ்கந்த மாதினி காத்யா யன்யயளே 
ஜெயஜெய கால ராத்திரி கௌரி 
 ஸித்திதா ஸ்ரீ நவ துர்க்கையளே 
 ரோகநி வாரணி சோக நிவாரணி 
தாபநிவாரணி ஜெய துர்க்கா!

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.